Friday, July 5, 2013

நந்தினியின் அப்பா - சிறுகதை பற்றி...

இப்போதெல்லாம் நான் சிறுகதைகள் படிப்பதே இல்லை. வேளைப் பளுவின் அழுத்தம் காரணமாக நீண்ட நாட்களாகப் படிப்பைச் சற்று தள்ளியே நிறுத்தியிருந்தேன். இன்று சுஜாதா செல்வராஜின் கதை ஒன்றை “கல்கி“யில் (07.07.2013-இதழ்) படிக்க முடிவானது. என்னைப் படிக்கத்துாண்டியது “நந்தினியின் அப்பா” என்ற கதையின் தலைப்பு.. இந்தத் தலைப்பு எனக்குள் ஏற்படுத்திய ஆர்வத்துக்குக் காரணம் நானும் கூட ஒரு நந்தினியின் அப்பாதான். ஆம் என் மகள் பெயர் நந்தினி.

 
ஆறாம் வகுப்புப் படிக்கும் நந்தினியின் வயதுக்கே உரிய பால்யகால நினைவுகளோடும் தன் தந்தையைப் பற்றிய துயரம் கவியும் நினைவுகளோடும் பயணிக்  கும் இந்த சிறுகதை கிராமக்களத்தில் நிகழும் ஒரு தவிர்க்க முடியா நிதர்சனத்தின் பதிவு.

 
கிராமப்புறங்களில் உள்ள எத்தனையோ மனிதர்கள் தங்களின் நடுநிலை தவறா நேர்மை மனத்தாலும் வாக்குமாறா நாக்கு சுத்தத்தாலும்  தங்களைச் சற்றியுள்ள சக மனிதர்களின் மனதில் மிகப்பெரிய அன்பையும் மரியாதையையும் பெற்றிருந்த போதிலும் சிலபல தீயபழக்கங்களால் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் தீராத் துயரில் ஆழ்த்திக் கொண்டிருந்துவிட்டு வடுக்களோடு மறைந்து போயிருக்கிறார்கள். . கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. “சைனம் சொல்லும் பல்லி சோற்றுப் பானையில் விழுந்தது” என்று. அப்படிச் சோற்றுப் பானையில் விழுந்த ஒரு பல்லிதான் சுஜாதா செல்வராஜ் தன் எழுத்தின் மூலம் நம் கண்முன்னே உலவவிடும் “நந்தினியின் அப்பா”.

 
நடப்பு நிகழ்வுகளுக்கும் நடந்த நினைவுகளுக்குமான காட்சிமாறுதல்களில் லாவகமாகத் தடம் மாறும் எழுத்து நடை, சிறுகதைகளுக்கே உரிய துல்லியமான காட்சிச் சித்திரம், சிதறாத மையம், கதையை முடிக்கும் இடத்தில் இருந்து வாசகரின் கற்பனைக்கு இடம் கொடுத்து மீண்டும் அவர்கள் மனதில் கதையைத் தொடரச் செய்யவல்ல நுட்பம் என்று சுஜா வின் எழுத்துத் திறன் போற்றுதலுக்குரியது. அவர் கதைகளை நான் முன்னம் படித்ததில்லை. அவர் நிறைய எழுத வாழ்த்துகள்.

3 comments:

  1. சுருக்கமான விமர்சனம் நன்று... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம். நினைவில் இருக்குமாறு எழுதிய சுஜாதாவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நீண்ட வாக்கியங்களை குறைத்து எளிய நடைமுறை தமிழில் இருந்தால் இன்னமும் சூப்பரா இறுக்கும்கிறது என்னோட கருத்து.என்ன சொல்லறீங்க..!

    ReplyDelete