Friday, May 17, 2013

பச்சைநீர்

எங்கிருந்தோ வந்தமர்ந்த
பறவை நான்
என் அலகு உனக்குள்
இறங்கிய மறுகணமே
தெரிந்துவிட்டது
பச்சயம் வற்றிப்போன
பட்ட மரம் நீ என்று

வெந்நீர் உற்றப்பட்ட
உன் வேர்களுக்கு
துளிர்க்கும் ஆசை
துளியளவு இருப்பினும்
எங்கிருந்தேனும் வந்துசேரும்
உனக்கான பச்சைநீர்

1 comment:

  1. /// துளிர்க்கும் ஆசை
    துளியளவு இருப்பினும் ///

    பிரமாதம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete