சுஜாதா எழுதிய ‘சுக துக்கம்’ என்ற சிறுகதையை நேற்று அவரின் தொகுப்பிலிருந்து எடுத்துப்படித்தேன். 1997 ல் எழுதியிருக்கிறார். மில் தொழிலாளி ஒருவரின் மரணம் நிகழ்ந்துவிட்டதைச் சொல்லி ஆரம்பிக்கிறது கதை. அது ஒரு தொழிற்சாலை விபத்து. இங்கு கதை சொல்லியாக இருப்பவர் இறந்தவரின் நண்பரான சக மில் தொழிலாளி ஒருவர். விபத்து நடப்பதற்குச் சற்று முன்பாகத்தான் இறந்தவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருகிறார்.
கதை வேறு ஒற்றும் இல்லை. அந்த மரணச் செய்தியை இறந்தவருடைய மனைவியிடம் முதலில் தெரிவிக்க வேண்டி நண்பர் என்ற முறையில் இவரை அனுப்ப நிர்வாகம் முடிவுசெய்கிறது. இவர் தயங்குகிறார். அவ்வளவு தைரியம் தனக்கு இல்லை என்று கருதுகிறார். கெட்ட செய்தியை எடுத்துக்கொண்டு சொல்ல இவருக்கு மனம் ஒப்பவில்லை. ‘அவருடைய வீட்டுக்குப் போய் அவர் மரணச் செய்தியைச் சொல்லுமாறு செய்துவிட்டாயே’ என்று கடவுளிடம் குறைபட்டுக் கொள்கிறார். இருந்தாலும் மேலதிகாரிகளின் நிர்பந்தத்தால் நடந்த விபரீதத்தைத் தெரிவிக்க அனுப்பிவைக்கப்படுகிறார். மிகுந்த மனஉலைச்சலுடன் இறந்த தன் நண்பரின் விட்டுக்குச் செல்கிறார். கதவைத்தட்டுகிறார்.
இதுவரைக்குமான இப்படிப்பட்ட கதையை யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். ஆனால் இதற்குப் பிறகு கதை ஒரே ஒரு வாக்கியத்தோடு முடிவு பெறும். அந்த இறுதி வாக்கியம் தான் இந்தச் சராசரிக் கதையை மிக அபாரமான சிறுகதையாக உருமாற்றம் செய்யும். சுஜாதாவின் இந்த ‘சுக துக்கம்’ கதை ஒரு எளிமையான சிறுகதை ஆக்கத்துக்கு மிகச்சிறந்த உதாரணம்.
testing ok...
ReplyDeleteநிச்சயம் வாசிக்கத் தூண்டும் சிறுகதை, வாசித்துப் பார்க்கின்றேன், பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.
ReplyDelete