Thursday, September 6, 2012

உங்களுக்குத் தெரியுமா டீச்சர்..?


எனக்குப்
பட்டம் விட ஆசை
நாய்க்குட்டி பிடிக்கும்
பூனைக்குட்டி கொஞ்சுவேன்
ரசம் சாதம் விருப்பம்
நடனமாடத் துடிப்பேன்
பாட்டுப் பாடித் திரிவேன்
சூரியனை ரசிப்பேன்
மழை வந்தால் நனைவேன்
கொஞ்சினால் சிரிப்பேன்
மிரட்டினால் நடிப்பேன்
புரிந்தால் படிப்பேன் என்று
உங்களுக்குத் தெரியுமா டீச்சர்..?



-ஆனந்தவிகடன்

5 comments:

  1. நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...

    புரிந்து படித்தால் போதுமே... அது தானே முக்கியம்...

    ReplyDelete
  2. கவிதையின் இறுதி வரிகள் முத்தாய்ப்பு!

    ஆனந்த விகடனில் இந்த கவிதை அங்கீகரிக்கப்பட்டு வெளியிடபட்டமைக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  3. படித்தால்தானே புரியும் குட்டிப்பெண்ணே....

    ReplyDelete
  4. புரிந்தால் படிப்பேன் //

    குழந்தைகளின் மனநிலையைத் தெளிவாக்கிய வரிகள்..

    ReplyDelete