Tuesday, September 4, 2012

நீர் பிறக்குமுன் - அனுபவப்பதிவு பற்றி.....

செயலின் தீவிரம் சுமக்கும் மொழியின் எளிமை
 
ஒரு சராசரிப் பெண்ணாக தன் பள்ளிக்காலத்தைக் கழித்த இந்திராவுக்கு காந்தியச்; சிந்தனையின் காரணமாகக் கிராமக் களப்பணியின் மீது  நாட்டம் ஏற்பட்டு அதன் தொடர்விளைவாகத் தன் கிராமத்துத் தலித் மக்களுக்கு ஆதிக்க சக்திகளின் மேலாண்மையில் அடிப்படைத் தேவையான குடிதண்ணீர் மறுக்கப்பட அதை நிவர்த்திக்கும் சமூகக் கடமை தனக்கிருப்பதாயக் கருதிக் கொண்டு அரசியல் அதிகாரம் மூலம் அதை வென்றெடுக்கமுனைந்து பல இடர்களுக்கும் தொடர் தோல்விகளுக்கும் பிறகு வெற்றி பெற்றிருக்கிறார்;. இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் என்ற முறையில் அதன் சாரத்தை தன் பார்வையில் இருந்து நீர் பிறக்குமுன் என்ற நூலின் மூலம் அனுபவப்பதிவாக்கியுள்ளார்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புற வர்ணனையில் ஆரம்பமாகிறது முதல் அத்தியாயம். கவுன்சிலர் பதவிக்குத் தேர்தல்> போட்டியிடல்> வெற்றிக்கான திட்டமிடல்> ஊர் பிரச்சனைகளை அறிதல்> மக்களிடம் நெருங்குதல்> வெற்றிபெறுதல்> முதல் கவுன்சிலர்கள் கூட்டம்> ஊராட்சி உறுப்பினர்களின் அதிகாரப் பகிர்வு வரையறை என்று ஒரு மிதமான போக்கில் செல்லும் இந்தப் பதிவு   தலித் மக்களின் குடிநீர்ப் பிரச்சனைப் பற்றி  எழுதப்படும் ஒன்பதாவது அத்தியாத்திலிருந்து அதன் பௌதீகத் தன்மையைப் பெறுகிறது.

குடிநீருக்காக சகலதுயரங்களையும் சந்திக்கின்றனர் தலித் மக்கள். இனி ஒரு விதி செய்வோம் என்று வீறு கொண்டு எழுந்த மக்களை இதுவரை நடைமுறையில் இருந்து வரும் விதி சோறு கொண்டு அடித்து அமரச் செய்கிறது. தலித் காலணிக்குக் குடிதண்ணீர் கொண்டு செல்லும் முயற்சியில் இந்திராவுக்குத் தோல்வி மேல் தோல்வி வர> தன் இயலாமையை நினைத்து வெட்கம் கொள்கிறார். உணர்ச்சிகளின் மேலீட்டால் கண்ணீர் விடுகிறார்.

பொதுவாக அனுபவப் பதிவை எழுதுகிறவர்கள் தங்களின் தீரங்களை அடிநாதமாய் ஆங்காங்கே பதிவு செய்து கொண்டு செல்வார்கள். ஆனால் இந்திரா அவ்வகை இல்லை. இந்தப் படைப்பின் வழியெங்கும் அவர் தன் இயலாமைகளை, தோல்விகளை> அச்சங்களை> சறுக்கல்களை> சூழ்நிலைக் கைதியாய் தான் ஆக்கப்பட்டதை> தேர்ந்தெடுத்த மக்களாலயே புறக்கணிக்கப்பட்டதை> பெண்மைக்கே உரித்தானவைகளாகக் கட்டமைக்கப்பட்ட பலகீனமான தருணங்களை எவ்வித பாசாங்குமின்றி படைப்பில் பதிவு செய்திருக்கிறார். இந்த நேர்மையே படைப்பை வாசக அனுபவத்தின் நெருக்கத்தில் வைக்கின்றது.

     
இந்திரா தன் போராட்டக்காலத்தில் பிரச்சினையின் உச்சத்தில் தனி நபராக உண்ணாவிரதம் இருக்கிறார். அங்கு ஆதிக்கச் சாதியினர் குழுமியிருக்கின்றனர். தலித் இளைஞர்கள் இவரின் உண்ணாவிரத்திற்கு ஆதரவாக தம் மக்களையும் ஈடுபடவைக்க முனைகின்றனர். ஆனால் அவர் அதை தடுத்து விடுகிறார். காரணம் தலித் மக்களும் அங்கு கூடினால் பிரச்சனை வேறு திசையில் பயணிக்கக்; கூடும். உண்ணாவிரதத்தின் நோக்கம் சிதைக்கப்படும். அதுமட்டுமின்றி தலித் மக்கள்மேல் ஆதிக்கச் சாதியினருக்கு தீராத வன்மம் கூடும். இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றாலும் அந்த வன்மம் வேறு விதங்களில் செயல்பட முனையும் என்று கருதி அவர்களை அங்கு வரவிடாமல் தடுக்கிறார். இந்த முடிவு தேர்ந்த அரசியல் அறிவாலும் சமயோஜித புத்தியாலும் எடுக்கப்படுகின்றது. இறுதியில் இந்திராவின் உறுதி தலித் மக்களுக்கு வெற்றியை ஈட்டித் தருகிறது.

இந்திராவின்; மொழிநடை லகுவாக இந்தப்படைப்பைத் தாங்கிக் கொண்டு பயணிக்கின்றது. சரளமான> மனதுக்கு இணக்கமான எளிய நடை இந்தப்பதிவின் உண்மைத் தன்மையை உள்ளபடி உணரச்செய்கிறது. ஆனால் சில இடங்களில் மொழியின் ஆதிக்கம் இந்த அனுபவப்பதிவைப் படைப்பிலக்கியமாக்கிவிடும் சாத்தியங்கள் தென்படினும் அது அப்படி ஒன்றும் இங்கு முரணாய்ப் போய்விடவில்லை.

இந்தப் புத்தகத்தில் மிக நுணுக்கமான  பற்பல விடயங்கள் முத்திரையாய் பதியப்பட்டுள்ளன.

நினைத்தால் கூட சட்டசபையில் நடப்பதுபோல மைக்கை எல்லாம் எடுத்து அடித்துவிட முடியாது. அதுதான் இல்லையே. ஒருவேளை இதைத்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் பரவலாக்கப்படவில்லை என்று சொல்கிறார்களோ என்னவோ!

     
வாழ்க்கையைப் புத்தகங்களின் மென்மையான> மனதுக்கு நெருக்கமான வாசனை மிகுந்த பக்கங்களுக்கு வெளியே தகிக்கும் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது..

சாப்பிடுகிற சாப்பாட்டிலிருந்து> அதில் கிடக்கிற கல்லிலிருந்து> குடிக்கும் தண்ணீர்வரை அரசியல் இருக்கிறது. காற்றைப்போலக் கண்ணுக்குத் தெரியாதபடி அரசியல் எங்கும் தன் அடர்ந்த நிழலைப் பரப்பியிருக்கிறது. அதிலிருந்து யாரும் தப்பித்துவிட முடியாது. நாம் விரும்பினாலும்> விரும்பாவிட்டாலும் அது k;மை ஒரு நிழலைப் போல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

நியாயத்திற்கான பாதைகள் எப்போதும் எளிதானவை அல்ல. ஆனால் அந்தப் பாதையில் எப்போதும் போராடுபவர்கள் தனித்துவிடப்படுவதில்லை.
என்பது போன்ற பதிவுகள் வாசிப்பனுபவத்தைக் கூட்டிப் படைப்பிற்கு வலிமை சேர்க்கின்றன.

     
இந்தப்படைப்பின் மூலம் இந்திரா தலித் மக்களின் துயரங்களை> கதறல்களை அதன் வீரியம் குறையாமல் எடுத்துரைக்கிறார். இது நாவலாக ஆக்கப்பட்டிருப்பின் இன்னும்கூட வீரியம் கொண்டிருக்கக்கூடும். இந்தப் படைப்புக்குள்ளாக மூன்று சக்திகள் இயங்குகின்றன. ஒன்று பாதிக்கப்பட்ட தலித் மக்கள். இரண்டு அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் உயர்சாதியினர். இந்த இரண்டிற்கும் இடையில் எரியும் வீட்டில் பிடுங்கும் குணம் கொண்ட அரசியல் அதிகார வர்க்கம். இதில் ஒவ்வொரு இயங்கு சக்திகளின் பார்வை வழியே இந்தப் பிரச்சனையை கொண்டு சென்றிருந்தால் தலித் மக்களின் துயரங்கள் அவர்களின் வாயிலாகவே சொல்லப்பட்டிருக்கும் சாத்தியங்கள் ஏற்பட்டு அதன் அதிர்வுகள் கூடுதல் பலத்துடன் கெட்டிப்பட்டுப் போன சமூகத்தின் மனதை இன்னும் வேகமாகத் தட்டிப்பார்த்திருக்கக்கூடும்.

ஆனாலும் இவையொத்த நேர்மைநிலை அனுபவப் பதிவுகள்தான் சாதியமெனும் விஷ விருட்சத்தின் வேர்களில் தொடர்ந்து ஊற்றப்பட்டுக்கொண;டிருக்கும் கொதிநீர்புத்தகம் : நீர் பிறக்குமுன்
ஆசிரியர் : இந்திரா
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்.  போன் : 04652 278525

No comments:

Post a Comment