Saturday, November 3, 2012

பால்யகால சகி - குறுநாவல் பற்றி....

ஈரோட்டிலிருந்து வேலுார் சென்றுகொண்டிருக்கிறேன். ஜன்னலோரம் அமர்ந்தபடி. மிகத்தனிமையான ரயில் பயணம். மழைச்சாரல் வழக்கம் போல் மிகக்கருணையாய் இறங்கிக்கொண்டிருக்கிறது. பச்சைபோர்த்திய மலைமுகடுகள் பூரிப்புடன் அந்த யாசகத்தை ஏற்றுக் கொள்கின்றன. வேகமாகப் பின்னோக்கிப் பறக்கும் மரங்கள். இணையாக உடன் துரத்திவரும் துாரத்துக்காட்சிகள். ஈரத்தின் சுகந்தம் நிரம்பிய மனம். தீரத்தீர நிறப்பிக்கொள்ளும் சதர்ன்ரயில்வே காபி. நான் மிகவிரும்பும் முகநுால் நண்பர்களின் ஆன்லைன் நெருக்கம். மிக அற்புதமான இந்தத் தருணத்தில் நேற்று இரவு படித்து முடித்த வைக்கம் முகமது பஷீரின் ‘பால்யகால சகி’ என் நினைவுகளில் வந்து மோதுகிறாள். வாழ்க்கை எந்த நிமிடமும் தன் கதியைத்திருப்பும் ஒரு மாயவிளையாட்டு என்பதை உணர்த்தும் பஷீரின் இந்தப் படைப்புக்கு முன்னால் மண்டியிட்டுத் தலைவணங்குகிறேன். சுகறாவுக்கும் மஜீதுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தவிர சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. 
 
 
-நிலம் புயல்  கரையைக்கடப்பதற்கு முன் காலையில் எழுதியது.


புத்தகம் : பாலயகால சகி
ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில் : குளச்சல் மு. யூசுப்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்.  போன்  : 04652 278525
 

4 comments:

  1. நல்லதொரு புத்தக அறிமுகம்...

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  2. குட்டி பத்தியில் அருமையான வர்ணனை!

    ReplyDelete
  3. புத்தகத்தை ரசிப்பதா. உங்கள் ரயில் பயணத்தை ரசிப்பதா தெரியவில்லை.
    நன்றி.

    ReplyDelete
  4. நான் மிக விரும்பிச்செய்த பகல் பயணங்கள் இந்த சேலம் காட்பாடி ரயில் பாதை, அதிலும் கொஞ்சம் மழை சேர்த்தால்......! மனம், மழை முகடு மற்றும் காடுகளை மிக விரைவாக தொடரும்.

    கண்ணப்பன்

    ReplyDelete